கோவிட் நெருக்கடி முன்னணி: தகனம் மற்றும் கல்லறை தொழிலாளர்கள்

அதிகாரப்பூர்வமாக, கோவிட் 19 நோய்த்தொற்று மற்றும் இந்தியாவில் அடிப்படை சுகாதார வசதிகள் கிடைக்காததால் தினமும் 4000 க்கும் மேற்பட்டோர் இறந்து கொண்டிருக்கின்றனர்.  இறந்தவர்களை தகனம் செய்வதில் அல்லது அடக்கம் செய்வதில் ஈடுபட்டுள்ளவர்கள் அல்லது மத அல்லது கலாச்சார மரபுகளின்படி இறுதி சடங்குகளை நடத்துபவர்களுக்கு பொருத்தமான தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களை அணிய அறிவுறுத்தப்பட்டுள்ளது.  PPE இல் கையுறைகள், முகம்-கவசம், கண்களைப் பாதுகாக்க கண்ணாடிகள், மருத்துவ முகமூடி மற்றும் மூடிய பாதணிகள் ஆகியவை இருக்க வேண்டும். காலரா போன்ற நோய்களுடன் ஒப்பிடும்போது மனித உடல்களைக் கையாளுவதால் கோவிட் 19 பரவுவதற்கான வாய்ப்பு குறைவு.  ஆனால் இறந்தவரின் உடல்களைக் கையாளும் ஒருவர் பாதிக்கப்பட்ட உடல் திரவம் அல்லது சுரப்புகளுடன் தொடர்பு கொண்டால் வைரஸால் பாதிக்கப்படலாம்.  கோவிட் இறந்த மக்களின் நுரையீரல் மற்றும் பிற உறுப்புகளிலும் நேரடி மற்றும் தொற்று வைரஸ்கள் இருக்கலாம்.  இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் போது, ​​தகனம் மற்றும் புதைகுழிகளில் உள்ள தொழிலாளர்கள் கடிகாரத்தை சுற்றி வேலை செய்கிறார்கள்.  கோவிட் தடுப்பூசிகள், சோதனைக் கருவிகள், சரியான பாதுகாப்பு உபகரணங்கள், நிதி உதவி, உணவு மற்றும் மனநலப் பாதுகாப்பு ஆகியவற்றை அவர்கள் பெரும்பாலும் அணுகுவதில்லை.  இந்த முன்னணி தொழிலாளர்கள் பலர் வரலாற்று ரீதியாக ஓரங்கட்டப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட சமூகங்களிலிருந்து வந்தவர்கள், அவை நிறுவனமயப்படுத்தப்பட்ட சாதி அடிப்படையிலான பாகுபாட்டை இன்னும் எதிர்கொள்கின்றன.  இந்த சுகாதார அவசரகாலத்தின் போது முன்னணி தொழிலாளர்களாக அவர்களின் பங்குகளை நாங்கள் அங்கீகரித்து, அவர்களின் அவல நிலையை மேம்படுத்த முயற்சிக்கிறோம்.

நோய் எதிர்ப்பு சக்தி என்றால் என்ன?

எந்தவொரு நோய் அல்லது தொற்று ஏற்படுத்தும் உயிரினங்கள் ஆகியவற்றிடம் இருந்து நம்மைப் பாதுகாக்கும் நிலை நோய் எதிர்ப்பு சக்தி என்று வழங்கப்படுகிறது. இந்தச் செல்கள், மூலக்கூறுகள் இணைந்து நம் உடலுக்குள் நுழையும் வேற்று உயிரினங்களுக்கு எதிராகச் செயல்படுகின்றன. நோய் எதிர்ப்பு செல்களில் உள்ள மூலக்கூறுகள், நோய்க்கிருமிகளின் மூலக்கூறுகளுடன் பிணைந்து தொற்று ஏற்படுவதைத் தடுக்கின்றன. நோய்க்கிருமிகளிடம் இருந்து நீண்ட கால பாதுகாப்பையும் நோய் எதிர்ப்பு சக்தி வழங்கும். குறிப்பிட்ட தொற்றுக்களை எதிர்த்துப் போராடுவதற்கான நோய் எதிர்ப்பு சக்தி தாவரங்கள், விலங்குகள் ஆகிய இரண்டுக்குமே உண்டு.

வைரஸ்களை எதிர்க்கும் நோய் எதிர்ப்பு சக்தி நமக்கு இருக்கிறதா?

வைரஸ் ஒன்று மனித உடலைத் தொற்றும்போது, மனித உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தில் உள்ள செல்கள், புரோட்டீன்கள் போன்றவை, உடலின் மற்ற செல்களுக்கும் தொற்று பரவாமல் இருக்க வைரஸை எதிர்த்துப் போராடுகின்றன. நோய் எதிர்ப்பு செல்களில் உள்ள குறிப்பிட்ட புரோட்டீன் மூலக்கூறுகள் வைரஸின் மேல்பகுதியில் பிணைந்துகொள்கின்றன. ஆனால், நம்முடைய நோய் எதிர்ப்பு செல்களின் செயல்பாடுகளை மீறிச்செல்லும் வழிகளை வைரஸ்கள் அநேக நேரங்களில் கண்டுபிடித்துவிடுகின்றன.

தடுப்பூசிகள் ஏன் தேவை?

சில நேரங்களில், வைரஸ் போன்ற குறிப்பிட்ட நோய்க்கிருமிகளுக்கு எதிராக நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தியை முடுக்கிவிடுவதற்கு தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன. இதனால் நோய் ஏற்படுத்தும் வைரஸ் வலுவிழந்து, மேற்கொண்டு தொற்று ஏற்படுத்தாது. மேலும் இந்த வலுவிழந்த, செயல்படாத வைரஸ் தடுப்பூசியாக நிர்வகிக்கப்படும். கொல்லப்பட்ட வைரஸின் பாகங்களும்கூட தடுப்பு மருந்தாகப் பயன்படுத்தப்படும். இந்தத் தடுப்பூசிகள் நம்முடைய நோய் எதிர்ப்பு செல்களை முடுக்கிவிட்டு, குறிப்பிட்ட வைரஸ்களிடம் இருந்து எதிர்காலத்தில் தொற்று ஏற்படாதவாறு பாதுகாக்கின்றன. தடுப்பூசி என்பது குறிப்பிட்ட நோய் ஏற்படுத்தும் ஒரு குறிப்பிட்ட வைரஸுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குவதே; எல்லா வைரல் நோய்களுக்குமானது அல்ல. உதாரணத்துக்கு போலியோ, பெரியம்மை தடுப்பூசிகள்.

என்கோவிட்19 ஏன் ஓர் உயிரி ஆயுதம் அல்ல?

கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் தொடங்கியவுடன், அந்த வைரஸ் ஆய்வுக்கூடத்தில் உருவாக்கப்பட்டது என்ற வதந்ததிகள் பரவத் தொடங்கின. இது வூஹானில் உள்ள நான்காம் நிலை உயிரிபாதுகாப்பு ஆய்வுக்கூடத்தில் தயாரிக்கப்பட்டது என்று அமெரிக்காவைச் சேர்ந்த சிலர் கூறினர். நான்காம் நிலை உயிரிபாதுகாப்பு ஆய்வுக்கூடங்கள் என்பவை, உலகின் மிகக் கொடிய நோய்க்கிருமிகளான எபோலா வைரஸ் போன்றவற்றை ஆராய்ச்சிகளார்கள் ஆய்வுசெய்யும் இடம். இந்த உயிரிபாதுகாப்பு ஆய்வுக்கூடங்கள் மிக உயரிய பாதுகாப்பு அம்சங்களுடன் வடிவமைக்கப்படுகின்றன. இத்தகைய ஓர் ஆய்வுக்கூடம் வூஹானில் இருப்பதானேலேயே என்கோவிட்19, மரபணு திருத்தம் செய்யப்பட்டு இங்கு உருவாக்கப்பட்டது என்றாகிவிடாது. 

சீனர்கள் சிலரோ, இந்த வைரஸ் அமெரிக்க ராணுவத்தால் கொண்டுவரப்பட்டது என்று கூறுகின்றனர். ஆனால், என்கோவிட்19 வைரஸோ மனிதர்களைத் தொற்றும் வைரஸ்களைவிடவும், வௌவால்கள், எறும்புண்ணி போன்றவற்றைத் தொற்றும் வைரஸ்களை ஒத்திருக்கிறது என்று அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர். 

என்கோவிட்19 உண்மையிலேயே உயிரி ஆயுதமாக இருந்திருந்தால், மனிதர்களுக்கு ஆபத்து ஏற்படுத்தக்கூடிய, ஏற்கெனவே அறியப்பட்ட வைரஸ் ஒன்றில் இருந்துதான் தயாரிக்கப்பட்டிருக்கும். வைரஸின் மரபணு தகவலை (ஆர்.என்.ஏ.) வைத்து, அதன் குடும்ப வரைபடத்தை அறிவியலாளர்கள் தயாரித்துள்ளனர். வைரஸ் ஒன்றின் மரபணு தகவல் எப்படி ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்குக் கடத்திச் செல்லப்படுகிறது என்பதைக் குடும்ப வரைபடம் விளக்கும். அதன்படி, இந்த வைரஸ் விலங்குகளில் இருந்தே மனிதர்களுக்குத் தொற்றியுள்ளது. 

உயிரி ஆயுதம் என்றால் என்ன?

கடந்த காலங்களில், நுண்ணுயிரிகளான பாக்டீரியா, பூஞ்சை ஆகியவற்றைக் கொண்டு நச்சுப் பொருட்களைப் பரவச் செய்வதன் மூலம் உயிரி ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டன. சண்டைகளின்போது தனிநபர்கள் அல்லது எதிரி மக்கள்தொகையின் மீது தொற்றச் செய்வதற்காகவென்றே இந்த நோய்க்கிருமிகள் வெளியிடப்படும். எடுத்துக்காட்டாக, பேசிலஸ் ஆந்திராசிஸ் (Bacillus anthracis) என்ற பாக்டீரியாவைக் கொண்டு ஆந்திராக்ஸ் நோயை ஏற்படுத்தியதன் மூலம் அது உயிரி ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்டது. 

உயிரி ஆயுதமாகப் பயன்படுத்தப்படும் நோய்க்கிருமிகள் மிகக் கொடிய நோய்களை உண்டு பண்ணும். என்கோவிட்19 கடுமையான உடல்நலமின்மையைக் கொண்டுவந்தாலும், உயிரிழப்பு அதிகளவில் இல்லை. ஆகவே, இது உயிரி ஆயுதம்தான் என்று கூறுவதற்கு மிகக் குறைந்த ஆதாரம்கூட இல்லை.

கொசுக்கள் n-COVID19 வைரஸ் தொற்று நோயைப் பரப்புவதில்லை

n-COVID19 வைரஸ் மனித உடல்களின் சுவாச மண்டலத்தை பாதிக்கிறது மற்றும் தொற்றுநோயை ஏற்படுத்துகிறது. கொசுக்கள் டெங்கு மற்றும் சிக்குன்குனியா போன்ற பல்வேறு நோய்களை ஏற்படுத்தும் என்று தெரிந்தாலும், அவை n-COVID19 வைரஸ்களை எடுத்துச் செல்வதில்லை. n-COVID19 நோயால் பாதிக்கப்பட்டவர்களைக் கடிக்கும் கொசுக்கள் பிற நபர்களுக்கோ அல்லது விலங்குகளுக்கோ வைரஸைக் கொண்டு செல்லும் திறன் கொண்டவை அல்ல.  n-COVID19 மூக்கு சார்ந்த நாசி வெளியேற்றம், உமிழ்நீர், இருமல் அல்லது வைரஸால் பாதிக்கப்பட்ட ஒரு நபரின் தும்மிகள் மூலம் பரவுகிறது. இன்றுவரை, கொசுக்கள் மூலம் வைரஸ் பரவக்கூடும் என்ற கூற்றை ஆதரிக்க எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை. தொற்றுநோயிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ள, பாதிக்கப்பட்ட எவரிடமிருந்தும் சமூக விலகலைப் கட்டாயமாக பின்பற்றவும். சமூக விலகல் என்பது நோயால் பாதிக்கப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பைத் தவிர்ப்பது அல்லது நோயின் அறிகுறிகளைக் காண்பிப்பதைக் குறிக்கிறது. உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, வறண்ட இருமல், காய்ச்சல் மற்றும் சோர்வு ஆகியவை கவனிக்கப்பட வேண்டிய சில பொதுவான அறிகுறிகளாகும்.

வைரஸ் என்றால் என்ன?

வைரஸ் என்பது நுண்ணிய, உயிரற்ற உயிரினம். பாக்டீரியா, தாவரங்கள், விலங்குகள் ஆகியவற்றின்மீது வைரஸ் தொற்றிக் கொள்ளும். அப்படித் தொற்றிக் கொள்வதன் மூலம், பல்வேறு நோய்களை இவை உருவாக்குகின்றன.  வாழும் உயிரினங்களின் மரணத்துக்குக் கூட இந்தத் தொற்று பல சமயங்களில் வழிவகுக்கும். மனித உடம்பில் இருப்பதைப் போன்ற செல்கள் வைரஸ்களுக்கு கிடையாது. எனவே, தங்கள் வளர்ச்சி மற்றும் உருவாக்கத்துக்காக வாழும் உயிரினம் ஒன்றை அவை  தொற்றிக் கொள்கின்றன. பெரும்பாலான வைரஸ்கள் மூன்று பாகங்களைக் கொண்டிருக்கும்: வைரஸ் பற்றிய தகவலைக் கொண்டிருக்கும் வேதி அமைப்பு, அதைப் பாதுகாக்கும் மேல் ஓடு, வெளிப்புற உறை. வாழும் உயிரினங்களில் இருந்து வைரஸ்கள் வேறுபட்டிருந்தாலும், மரபணு தகவல் குறித்த வேதி அமைப்புகளைக் (வாழும் உயிரினங்களில் டி.என்.ஏ. மற்றும் ஆர்.என்.ஏ; வைரஸ்களில் ஆர்.என்.ஏ.) கொண்டிருப்பதுதான் இரண்டுக்கும் இடையில் உள்ள ஒரே ஒற்றுமை. வைரஸ்கள் தங்களைப் பெருக்கிக் கொள்வதற்கான முதல் வேலையாக, வாழும் உயிரினம் ஒன்றின் செல்லுக்குள் புகுந்து அதன் செயல்பாட்டைக் கட்டுக்குள் கொண்டுவரும். பிறகு அந்தச் செல்லுக்குள்ளேயே தன்னுடைய நகல்களைப் பெருக்கிக் கொள்ளும். ஒரு கட்டத்தில் அந்தச் செல் வெடித்து, வைரஸ் துகள்களை மற்ற செல்களுக்கும் பரப்பும். சில சமயங்களில் நகல்களைப் பெருக்கும் நிகழ்வின்போது, வேதி அமைப்புகளைக் கொண்டிருக்கும் தகவல்கள், மரபணு திடீர் மாற்றம் (mutation) என்ற நிகழ்வினால் மாற்றத்துக்கு உள்ளாகும். இது நோய்க்கான சிகிச்சையைக் கடினமாக்கும். சார்ஸ் (SARS), இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் மற்றும் என்கோவிட்-19 (nCovid-19) போன்றவை மனிதர்களைப் பாதிக்கும் வைரஸ்களில் சில. தற்போதைய என்கோவிட்-19 வைரஸ் கடந்த காலத்தில் விலங்குகளைத் தொற்றி, சீனாவின் உயிரி விலங்கு சந்தையில் இருந்த விலங்கு ஒன்றிலிருந்து மனிதர்களுக்குத் தொற்றியிருக்கிறது.